புதன், 31 டிசம்பர், 2008

வாழ்க்கை வாழ்வதற்கே

மனதில் உறுதி தேவை
மனதில் உறுதி தேவை. வாழ்க்கை வாழ்வதற்கே, சாவதற்கு அல்ல ஒவ்வொரு சோதனையைையும் வெற்றியோடு தாண்டி முன்னேறிச் செல்வதற்கு முதலில் மனதில் உறுதி வேண்டும்.
நாம் செல்லும் பாதைகள் எங்கும் கல்லும், முற்களும், செடிகளும், குப்பைகளும், சேறுமாய், பள்ளங்களும் நிறைந்து இருக்கும். இந்தப் பாதையில் நாம் எப்படிப் போக முடியம் என்று மற்ற பாதையில் செல்வதால் காலமும் நேரமும் தான் நம்மை விட்டு வொகுதூரம் செல்கின்றன.
அந்தப் பாதையையும் தாண்டிச்செல்ல முடியும் என்கின்ற மன உறுதி வந்து விட்டால் தாண்டிச் செல்ல முடியும். அன்றைய காலத்தை விட இன்றைய காலம் மாறுபட்டு நிற்கின்றது. உணவு, உடை நடைகள், நோய்கள் எல்லாம் வெவ்வேறு கோணங்களாக மாறிவிட்ட போது மனதில் சஞ்சலங்களும் வடுக்களும் நிறைந்து போயின.
இதை நாம் சமளிப்பதற்கு ஒரே மருந்து நம்மை நாம் முதலில் சமாதானப் படுத்தி, தேவையற்ற விஷயங்களைத் தூக்கி எறிந்து, நல்ல விஷயங்களை மட்டும் சுவாசித்து, மனதில் நிலையான உறுதியை நமக்குள் ஏற்ற்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதலில் மனதில் சக்தி இல்லை என்றால் வாழ்கையைக் கொண்டு செல்வது கடினம். முக்கியமாக எந்த ஒரு விஷயத்திற்காகவும் நம்மை முழுமையாய் அர்ப்பணித்து விடக் கூடாது. அதுவே முதலில் நம்மை நோயில் வீழ்த்தி விடும். இம்மனம் என்ற மாளிகை மாயை என்ற போதைக்குள் புதைக்கப்பட்டு விட்டால் அது மாயையைத்தான் தேடிக்கொண்டே இருக்கும். மாயையிடம் இருந்து மனதைக் காப்பாற்ற உண்மைகளை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் மாயையிடம் மாட்டிக்கொள்ளாதவாறு கவனமாய் இருக்க வேண்டும்.
நம் மனதை அலைமோத விட்டால் அது நம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டிய நிலைதான் தரும். அதன் பின் எந்த மருந்தாலும் நம்மை குணப்படுத்திக் கொள்ள முடியாது. நமது வாழ்க்கை மரணத்தோடு முடிவடைகின்றதுதானே என்ற நினைத்துக்கொண்டு வாழ்வதை விட இந்த மரணம் வரையாவது நல்லதாக வாழ்வோம் என்று வாழ்வதே வாழ்க்கையின் சிறப்பு. இதற்கு நமது சிந்தனைகளும் மனதும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். வாழ்வதற்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ளணும். எதிர்ப்புகளையும் துன்பங்களையும் சமாளிக்க கற்றுக்கொள்ளணும்.
ஒவ்வொரு தினமும் ஏதாவது ஒரு நிலை மாறத்தான் செய்கின்றது. அந்த மாற்றங்களைக் கண்டு வெறுப்பும் சோர்வும் வரத்தான் செய்யும். அதை முறியடிக்கும் நிலைக்கு நம் மனதைத் தயார்படுத்திக் கொள்ளணும். எந்த ஒரு கொடை வள்ளலாலும் சாதிக்க முடியாத எந்த ஒரு விஷயத்தையும் இந்த மனம் என்பதால் சாதிக்க முடியும். மனது உறுதியாக இருந்தால் ஒரு சாம்ராஜ்யத்தையும் அசைக்க முடியும்.
ஞானேந்திரன் என்ற ஞானம்
தேங்க்ஸ் டு

புத்தாண்டு உறுதியாக

புத்தாண்டு உறுதியாக தினமும் காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்து பூங்காவில் நடக்கச் செல்வோம் என்று முடிவு செய்வோம். முதல் இரண்டு வாரங்களுக்கு சுறுசுறுப்பாகப் போகும். ஒவ்வொரு நாளும் சாதிக்கும் பூரிப்பில் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். ஆரம்பச் சிக்கல்களை சமாளித்து இப்படியே வாழ் நாள் முழுவதும் இந்தப் பழக்கம் தொடரப் போகிறது என்று இருக்கும் போது ஓசை இல்லாமல் சறுக்கல்கள் ஆரம்பிக்கும்.
“இன்று காலையில் தூறலாக இருக்கிறது, எப்படி வெளியே போவது?”“நேற்றைக்கு இரவு வெளியூரிலிருந்து வர தாமதமாகி விட்டது. சீக்கிரம் எழுந்திருக்க முடியாது!”“இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே, ஒரு நாளாவாது அதிக நேரம் தூங்கிக் கொள்வோம்!”
இல்லையென்றால், விடிகாலையில் கழுத்தைக் கட்டிக் கொண்டு விடும் உறவுகள், உடல் நிலை சரியில்லாமல் போதல் என்று பல வடிவில் சோதனைகள் வர ஆரம்பிக்கின்றன. இரண்டாவது, மூன்றாவது மாத முடிவில் பார்த்தால் புத்தாண்டு தீர்மானமும் ஒரு சில வாரப் பழக்கமும் வரலாற்றுப் புத்தகங்களுக்கு விடப்பட்டிருக்கும்.
புதிய பழக்கத்தில் ஆரம்பச் சிக்கல்கள், நடை முறை தடைகள். ‘மாலையில் எண்ணெய்ப் பலகாரம் சாப்பிட மாட்டேன்’ என்று முடிவு செய்ந்திருந்தால், அந்த நேரத்தில் பசிக்கு வேறு என்ன சாப்பிடுவது என்று ஆரம்ப நாட்களில் குழப்பம் ஏற்படும். நாக்குக்கும் வயிற்றுக்கும் ஒத்துப் போகும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பழக வேண்டும்.
வழக்கமாக வரும் நண்பர்கள் சமோசா வாங்கி வந்து விட்டதைச் சமாளிக்க வேண்டும். இந்த ஆரம்ப கால சவால்களைச் சமாளித்து முன்னேற, தீர்மானதை எடுக்க வைத்த மன உறுதி போதுமானதாக இருக்கும். இங்கேயே கைவிரித்து விடுபவர்கள் தமது தீர்மானத்தின் நன்மையைப் பற்றி முழுதும் நம்பவில்லை, அல்லது போதிய மன உறுதி இல்லை என்று சொல்லி விடலாம்.
முதலில் சொன்ன இரண்டாவது கட்டச் சோர்வு, நமக்குத் தெரியாமல் பதுங்கி வந்து கவிழ்த்து விடுவது. பெரும்பாலானவர்களின், பெரும் மன உறுதி படைத்தவர்களின் தீர்மானங்களை பாறையை உடைக்கும் பசுஞ்செடி வேர் போலப் பிளந்து போட்டு விடும்.
முதலில் தீர்மானத்தை நண்பர்களுக்கும் கூட வசிப்பவர்களுக்கும் தெளிவாகத் தெரியப்படுத்தி விட வேண்டும். இதனால், எல்லோரிடமும் மானம் போய் விடக் கூடாது என்ற கூடுதல் பாதுகாப்பு மனம் தளரும் போது கிடைக்கும். கூடவே அவர்களிடமிருந்து வரும் தூண்டுதல்கள் குறையவும் வழி வகுக்கும். தெரியாமல் நமது உறுதியை உடைக்க முயல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும்.
இரண்டாவதாக, ஒரு முறை தவறி விட்டால் பெரிய பாவம் செய்ததாக எண்ணி எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடக் கூடாது. எத்தனை முறை சறுக்கினாலும், எழுந்து தொடர்ந்து ஓட வேண்டும்.
மூன்றாவதாக, குறிப்பிட்ட நேரம் மற்றும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு பழக்கத்தைச் செயல்படுத்துவது உதவினாலும், அந்த நேரம், இடம் தவறி விட்டால் மாற்று இடத்தில் செய்வதற்கான வசதி/ஏற்பாடு வைத்துக் கொள்ள வேண்டும். மழை பெய்வதால் வெளியே நடக்கப் போக முடியா விட்டால், வீட்டுக்குள்ளேயே அதே நேரத்தில் நடப்பதற்கு தற்காலிக ஏற்பாடு திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் பழக்கத்தைச் செய்ய முடியாவிட்டால், நேரம் கிடைக்கும் போது செய்து விட வேண்டும்.
நான்காவதாக, நம்முடைய மன உறுதிக்கு அடுத்தக் கட்ட அரணாக அடுத்தவர்களின் உதவியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காலையில் நடக்கப் போகும் போது, கூடவே பக்கத்து வீட்டுக்காரரையும் கூட்டிக் கொண்டு போனால், நமது மனம் சுணங்கினாலும் அவர் காத்திருப்பாரே என்று எழுந்து விடுவோம். அல்லது அவரே வந்து எழுப்பி விடுவார். நாட்குறிப்பு எழுதினால் வலைப்பூ ஒன்றில் பதிக்கலாம். ஒரு நாள் தவறினால் அந்த பதிப்பு விட்டுப் போவது மனதுக்குப் பிடிக்காமல் ஒரு தூண்டுதல் கூடுதலாகக் கிடைக்கும்.
இதுதான் கதை. கடந்து ஒரு வாரத்தில் இரண்டாவது நாளாக நேற்று நாட்குறிப்பு எழுதவில்லை. முதலில் ஒரு சாக்கு. நேற்று மற்றொரு சாக்கு. இன்று விடுமுறை நாள், இரவில் தாமதமாகத் திரும்பி வந்த நாள். இன்றும் கட் அடித்து விடலாம் என்று தோன்றாமலா இருக்கிறது

மனதில் உறுதி தேவை

நம்முடைய மனம் இருக்கிறதே, விசித்திரமானது. பல இடங்களில் பொறிகள் வைத்திருக்கும். அளவுக்கு மீறிய சாப்பாட்டினால் உடம்பை வருத்திக் கொள்ள வேண்டாம் என்று கட்டுப்படுத்தினால் வேறு பக்கத்தில் உடைத்துக் கொண்டு போக முயற்சிக்கும். குரங்குக்குத் தலையில் தட்டி வைக்கும் சாமியார் போல தொடர்ந்து விழிப்பாக இல்லா விட்டால், தலை மேல் ஏறி முடியை உலுக்க ஆரம்பித்து விடும்.
ஏன் எதையும் கட்டுபடுத்த வேண்டும், அப்படியே போகிற போக்கில் விட்டு விட வேண்டியதுதானே என்ற ஒரு தத்துவம் ஒரு காலத்தில் இருந்தது. என்னதான் செய்தாலும் இப்படியே வாழ்ந்து ஒரு நாள் சாகத்தான் போகிறோம். அதற்கு நன்றாக அனுபவித்து வாழ்ந்து விட்டுப் போக வேண்டியதுதானே. எதற்கு இவ்வளவுக் குழப்பங்கள் என்று நினைப்பதுண்டு.
அப்படி வாழும் பலரையும் பார்த்திருக்கிறேன். எப்போதும் சிரித்த முகமாய், வஞ்சனை இல்லாத உடம்புடன், எல்லோருக்கும் நண்பர்களாய் இருப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். எதற்கு அலட்டிக் கொள்ளாமல் பிடித்ததைச் செய்து கொண்டு வாழ்க்கை என்னும் ஆற்றில் மிதந்து போய்க் கொண்டிருப்பார்கள்.
நமக்கு இருக்கும் தன் முனைப்பில் எதிர் நீச்சல், வண்ணத்துப் பூச்சி நீச்சல், கால்களை உதைத்தல் என்று பல வகைகளில் ஆற்றின் போக்குக்கு எதிராக முயன்று கொண்டே இருக்கிறோம். என்னதான் செய்தாலும் கடைசியில் கடலுக்குப் போய்ச் சேர வேண்டியதுதானே!
ஆறு ஏன் ஒரு திசையில் போகிறது? கடலிலேயே போய்ச் சேர வேண்டும் என்பது விதியா என்ன? உள்நாட்டிலேயெ கிளைகளாகப் பிரிந்து வடிந்து விடும் ஆறுகளும் இருக்கின்றன. நாம் மிதக்கும் ஆற்றில் நமது கை கால் உதைத்தலில் நமக்குக் கண்ணுக்குத் தெரியும் வகையில் ஆற்றின் போக்கில் மாற்றம் தெரிவதில்லை. அதனால் மனம் சோர்ந்து விடுகிறது. பக்கத்தில் மிதக்கும் கட்டையுடன் சச்சரவு இட்டுக் கொண்டே விதி வகுத்த திசையில் போய் விழுகிறோம்.
கொஞ்சம் சிந்திக்க ஆரம்பிக்கும் போது என்ன செய்து என்ன ஆகப் போகிறது என்று ஒரு சலிப்பும் வந்து விடுகிறது.
நாம் உதைக்கும் ஒவ்வொரு உதையிலும், நாம் அடிக்கும் ஒவ்வொரு எதிர் நீச்சலுக்கும் ஒரு பலன் கண்டிப்பாக இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு அங்கமான நாம் செய்யும் ஒன்று வாழ்க்கையை, இந்த உலகைப் பாதிக்கிறது. அது ஒரு சங்கிலித் தொடராக வியாபித்து உலகையே மாற்றி விடுகிறது.
நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது “நான் கறுப்புச் சந்தையில் சினிமா டிக்கெட் வாங்காமல் இருந்தால் எனக்கு என்ன நன்மை, சினிமா பார்க்காமல் திரும்பி வருவதுதான் மிஞ்சும். செய்யக் கூடியவன் தவறுகளைச் செய்து கொண்டேதான் இருப்பான், குழந்தை உணவில் கலப்படம் செய்பவன், நான் பிளாக் டிக்கெட் வாங்காமல் இருந்தால் மாறி விடுவானா?” என்று பேச்சு வந்தது.
கறுப்புச் சந்தையால், படம் பார்க்க வந்திருக்கும் ஒரு தொழிலாளிக்கு படம் பார்க்க முடியவில்லை. நான் கூடுதல் பணம் கொடுத்து வாங்கியிருந்த இருக்கை, கறுப்புச் சந்தை இல்லாமல் இருந்தால் அவருக்குப் போய் சேர்ந்திருக்க வேண்டியது. அவர் கண் முன்னால் நடப்பதை பார்த்து மனம் நொந்து போகிறார். நாம் என்ன நேர்மையாக இருந்து என்ன பலன், காசு இருப்பவனுக்குத்தான் வாழ்க்கை என்று விரக்தி அடைகிறார்.
அடுத்த நாள் குழந்தை உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் தனது வேலைக்குப் போகிறார். ஒரு இயந்திரத்தில் ஏதோ கோளாறு இருப்பது அவருக்குத் தெரிய வருகிறது. சின்ன அடையாளம்தான், அனுபவ சாலியான இவருக்குப் புலப்பட்ட அந்த நுணுக்கம் வேறு யாருக்கும் பல மணி நேரம் வரை தெரியாமல் போகலாம்.
அது அவரது பொறுப்பைச் சார்ந்தது இல்லை. ஆனால் நினைத்தால் எச்சரித்து இயந்திர அமைப்பைச் சரி செய்ய வைத்து தரக் குறைவைத் தவிர்க்கலாம். விரக்தியான மன நிலையில் இருக்கும் அவர், ‘போகட்டும், தரம் குலைந்தால் ரிஜெக்ட் ஆகட்டும், முதலாளிக்குக் கொஞ்சம் லாபம் குறைந்தால் என்ன நொடித்தா போவார்’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்.
அரை டன் மாவு தயாராகி தரக் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. கோளாறும் பிடிபட்டு விடுகிறது. முதலாளிக்கோ காசை விட்டுக் கொடுக்க மனதில்லை. இப்படி ஒவ்வொன்றாக விட்டு விட்டால் அடுத்த முறை அவரும் சினிமா தியேட்டரில் வரிசையில் நிற்க வேண்டியதுதான். கறுப்புச் சந்தை விலைக்கு எப்படி காசு மிஞ்சும்.
ஒரு அரை கிலோ சரிக் கட்டும் வேதிப் பொருளைக் கலந்து அரசு தர நிர்ணய வரம்புகளைக் காட்டி விடுங்கள், எப்படியும் பெரிய பிரச்சனையில்லை. ஆறு மாதங்களுக்குள் விற்றுப் பயன்படுத்தப்பட்டு விட்டால் தீங்கு எதுவும் இல்லை என்று முடிவு செய்து விடுகிறார். ஆனால் டப்பாவின் மீது ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம் என்று முத்திரை. தான் மட்டும் உத்தமனாக ஏன் இருக்க வேண்டும் என்று அந்த முதலாளியும் ஒரு முடிவு எடுக்கிறார்.
அதில் பல டப்பாக்கள் ஆறு மாதங்களுக்குள் விற்றுப் போகாமல் நாட்டின் பல்வேறு மூலைகளில் ஆறு மாதம் காலாவதி ஆகிப் போய் சில குழந்தைகளுக்கு நச்சு ஏற்பட்டு இறக்க நேரிடுகிறது. ஏதோ உணவுப் பொருள் ஒவ்வாமை என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்து வேலையை முடித்து விடுகிறார்கள்.
இப்படி கோடிக் கணக்கான மனிதர்களின் சரியான நடவடிக்கைகளில்தான் நமது வாழ்க்கை அடங்கி இருக்கிறது. நாம் மனம் வெறுத்து நமது கடமை தவறினால் அது எந்தத் திசையில் நம்மைப் பாதிக்கும் என்று யாருக்குத் தெரியும்.
தேங்க்ஸ் டு WordPress.com

நம் மனம் என்னும் எண்ணங்களும்

சாமியார் ஒருவர் குரங்கு ஒன்றை பணியாளாக வைத்திருந்தார். சாமியைப் பார்க்க வந்திருந்தவருக்குப் பணிவிடைகள் செய்ய குரங்கை ஏவிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வேலை சொல்லும் முன்னாலும் குரங்கில் தலையில் கையில் இருந்த குச்சியால் ஒரு அடி அடித்து அனுப்பிக் கொண்டிருந்தார். வந்தவரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்். என்ன இது, அது பாவம், வாயில்லா உயிர், அமைதியாக இவர் சொல்வதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறது. இவர் சும்மா அடித்துக் கொண்டே இருக்கிறாரே என்று பரிதாபப்பட்டு “சாமி கொஞ்ச நேரம் அந்தக் குச்சிக்கு ஓய்வு கொடுங்களேன்” என்று கொஞ்சம் கடிதலாகவே சொன்னார்.
சற்று நேரத்தில் குரங்கு வந்தவரின் அருகில் வந்து அமர ஆரம்பித்தது. யாரும் எதுவும் சொல்லவில்லை. அவரது சட்டையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது. இவ்வளவு நல்ல குரங்கு, விளையாடி விட்டுப் போகட்டும் என்று அவரும் கண்டு கொள்ளவில்லை. இப்படியே போய், கடைசியில் அவர் தலையில் ஏறி முடியைப் பிடித்து ஆட்ட ஆரம்பித்த பிறகுதான் “சாமி, உங்க குச்சிக்கு வேலை கொடுங்க” என்று கேட்க மனம் வந்தது அவருக்கு.
நம் மனம் என்னும் எண்ணங்களும் அப்படித்தான். குதித்து கும்மாளம் போட்டு நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் சிக்கலில் மாட்டி வைப்பதில் கில்லாடி. அதற்காக குச்சியைக் கையில் எடுத்தால் சாதுவாக மாறி விடுகிறது. சாதுவாகி விட்டதே என்று குச்சியைக் கீழே போட்டு விட்டால் திரும்பப் பழைய புத்தி திரும்பி விடுகிறது.

எங்க பாஸ் என்னக்கு சொன்ன கதை :
மனதை அமைதியாக வைத்திருப்பது என்பது கடினமான காரியம்தான். ஆனால் ஒருவர் தனது மனதை அமைதியாக வைத்திருப்பது மிக மிக அவசியமாகும்.
மனம் அமைதியாக இல்லாவிட்டால் எந்த வேலையிலும் ஈடுபட முடியாது. எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது.
திடீர் திடீர் என்று கோபம் வரும் - மிக நெருங்கியவர்கள் மீது அந்தக் கோபத்தைவிட வேண்டிவரும். அதனால் அருகில் நெருக்கமாக உள்ளவர்கள் எல்லாம் பகைவர்களாக மாறுவார்கள்.
மன அமைதி இல்லாதபோது அறிவு தடுமாறும். எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது. முடிவு எடுத்தாலும் தவறானதாகவே முடிந்து விடும்.
மன அமைதி இன்மையால் உறக்கம் வராது. பலர் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு உறங்குவதற்கு மன அமைதி இன்மையே காரணமாகும்.
மன அமைதி இன்மை உறக்கத்தைக் கெடுப்பதோடு உடல் நலனையும கெடுக்கும். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எந்த நோயும் உடம்பில் இருக்காது, ஆனால் உடல் நலமாக இருக்காது.
மன அமைதி இன்மை புகை, மது, மங்கை என்ற தவறான வழிகட்கு எல்லாம் இட்டுச் செல்லும் - பல குடும்பங்கள் அழிந்தது - அழிவது எல்லாம் - ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் மன அமைதி இன்மையே அடிப்படைக் காரணமாகும்.
மன அமைதி இல்லாதவர்கள் மனம் விட்டு சிரிக்கவும் முடியாது. எப்போதும் முகம் இருளடைந்தே இருக்கும். அதனால் மன அமைதியின் இன்றியமையாமையைப் புறக்கணிக்காமல் எச்சரிக்கையாக இருந்து அமைதியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மன அமைதி கெடக் காரணங்கள்
இரண்டு வகையில் மன அமைதி கெடுகின்றது. ஒன்று ஒருவன் தனது எண்ணங்களால், பேச்சால், செயல்பாடுகளால் மன அமைதியை இழந்து விடுதல்.
இரண்டு மற்றவர்களால், மன அமைதி இழத்தல். ஆக நம்மாலும் மற்றவர்களாலும் இந்த இரண்டு வகையாலும் மன அமைதி கெடுகின்றது.
தன் செயல்
ஒரு சிலர் தாங்கள் அறியாது, ஆராயாது, ஆசை காரணமாகச் செய்கின்ற செயல்களின் விளைவினால் மன அமைதியை இழக்கிறார்கள். இவர்கள் தங்கள்தவறுகளைப் புறக்கணித்த போதும் மனசாட்சி இடைவிடாது உறுத்திக்கொண்டே இருக்கும். அதனால் மன அமைதியை இழப்பர்.
யாரையேனும் கடுமையாகப்பேசிவிட்டு வருந்துதல்; தனக்கு இருக்கும் செல்வாக்கால் வரம்பு மீறிய செயல்களைச் செய்து விட்டு வருந்துதல், இவைகள் எல்லாம் மன அமைதியை கெடுத்து விடுகின்றன.
சிலர் வீண் செலவு செய்து விட்டு வருந்துதல், நேரத்தை வீண்டித்துவிட்டு வருந்ததல் இதுபோன்ற செயல்களால் அமைதியை இழந்து தவிப்பதும் உண்டு.
பிறரால் மன அமைதி கெடுதல்
பலர் மன அமைதியை இழப்பதற்கு அவர்களோடுதொடர்புடையவர்கள் காரணமாக இருப்பார்கள். மன உறுதி இல்லாதவர்கள் பிறரால் மன அமைதி கெடுவதே அதிகமாகும். குடும்பத்தில் இருந்தே இந்தச் சிக்கல்கள் தொடங்குகின்றன. குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை, வீட்டில் உள்ளவர்கள் சொன்னபடி கேட்கவில்லை, குடும்பத்தில் அளவிற்கு மீறிய செலவினங்கள் - இப்படி ஏதேனும் ஒரு காரணம் பெற்றோரின் மன அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
சிலர் தம் தாட்சண்யம், கருணை காரணமாகவே மன அமைதியை இழந்து விடுகிறார்கள். பாவம் என்று வேலை தெரியாதவனை ஒரு வேலைக்கு வைத்துக்கொள்ளுதல், பாவம் என்று உதவி செய்துவிட்டு அது திரும்ப வராதபோது மன அமைதியை இழத்தல் - அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுத்து விட்டு அதனை வசூல் செய்யாதபோது மன அமைதி இழந்து விடுதல் - ஒருவரை நம்பி மோசம் போனபோது மன அமைதியை இழத்தல் - இப்படிச் சிலர் மன அமைதியை இழந்து விடுகின்றனர்.
தொழில் செய்யும் இடத்தில் தேவையில்லாததைப் பேசி அதனால் ஏற்படும் துன்பத்தால் மன அமைதியை இழப்பவர்கள் உண்டு. அவசரப்பட்டு ஏதோ சொல்வதும் சில செயல்களைச் செய்வதாலும் விளைவு வேறாக வரும்போது மன அமைதி போய்விடுகிறது.
வீட்டில் அமைதி இல்லாதவர்களால் தொழில் செய்யும் இடத்தில் அமைதியாக இருக்க முடியாது. தொழில் செய்யும் இடத்தில் அமைதியை இழந்தவர்கள் வீட்டில் அமைதியைக் கெடுத்து விடுவார்கள். எல்லோரும் இழந்த அமைதியை மீண்டும் தேடி அலைகிறார்கள் என்பதுதான் உண்மை. அமைதி என்பது வெளியில் இல்லை. அது நம்முள்ளேதான் இருக்கிறது. அதைக் கண்டறிந்து நாம்தான் பாதுகாக்க வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும்.
காரணம் கண்டறியுங்கள்
ஒரு தாளை எடுங்கள், உங்கள் அமைதி கெட்டதற்குரிய காரணங்களை வரிசைப்படுத்துங்கள். அமைதியாக இருந்த நாட்களை எண்ணிப் பாருங்கள். அதற்குப் பிறகு எப்போதிலிருந்து, எப்படி அமைதி கெட்டது என்பதற்குரிய காரணங்களை கண்டறியுங்கள். வரிசைப்படுத்துங்கள்.
1. யாரேனும் உங்களைப்பற்றித் தவறாகப் பேசியதால் நீங்கள் அமைதியை இழந்திருக்கலாம்.
2. நீங்கள் வாங்கிய கடனைத்திரும்பக் கேட்டபோது உங்கள் அமைதிக்குப் பாதிப்பு நேர்ந்திருக்கலாம்.
3. நடக்க வேண்டிய காரியங்கள் சரியாக, சீராக நடக்கவில்லையானாலும் நீங்கள் நினைத்தக் காரியம் நினைத்தபடி நடக்கவில்லையானாலும் அமைதி இழக்கும் நிலை ஏற்படும்.
4.. நீங்கள் அன்பு செலுத்தியவர்கள் உங்களைப் புறக்கணித்த போது அமைதியை இழந்திருக்கலாம்.
5. ஒரு பொருளை வாங்க எண்ணி முடியாதபோது, ஒரு பதவியை அடைய முயற்சித்துத் தோல்வி அடைந்தபோது அமைதியை இழந்திருக்கலாம்.
6. உங்கள் குழந்தைகள் தவறான பழக்கத்தற்கு அடிமையாகி விட்டமை அறிந்தபோது அமைதியை இழந்திருக்கலாம்.
7. அநியாயமாகச் செயல்கள் நடைபெறுகின்றபோதும், அதனால் தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கப்பட்ட போதும் அமைதியை இழந்து இருக்கலாம்.
8. உடல் நலக்குறைவு, தீராத நோய், உடல் ஊனம் போன்றவைகளும் மன அமைதியைக் குலைத்து விடும்.
9. காதல் தோல்வி - இது போன்ற உள்ளார்ந்த செயல்பாடுகளால் அமைதியை இழக்க நேரிடலாம்.
10. நாட்டின் நிலையை நினைத்து சிலர் அமைதியை இழப்பதும் உண்டு.
இத்தகைய இவை போன்ற பல காரணங்களால் நம் மன அமைதிக்கு பாதிப்பு நேர்வதுண்டு எதனால் என்று கண்டறிந்து அதை நீக்க முயற்சிக்க வேண்டும். அதுவே மன அமைதியை மீண்டும் பெறுவதற்குரிய சிறந்த வழியாகும்.
அமைதியை வளர்த்துக் கொள்ள சில விதி முறைகள்.
1. நல்ல பழக்க வழக்கங்கள்.
முறையான பழக்க வழக்கங்கள் அமைதியை நல்கும். நமது முறையான பழக்க, வழக்கங்களே - அதிகாலையில் எழுதல், குளித்துவிட்டுப் பணிகளுக்குச் செல்லல் போன்ற சிறு சிறு செயல்கள்தாம் நம் குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்கு நிரந்தர பாடமாக அமைகின்றன.
தநதை தாம் புகை பிடிப்பதை அங்கீகரித்துக் கொள்கிறார். தன் மகன் புகை பிடிக்கும்போது மன அமைதியை இழந்து விடுகின்றார். காரணம் மகனைத் திருத்தும் தகுதியை அவர் இழந்துவிடுகிறார்.
2. நேர்மையாக நடந்துகொள்ளுதல்
முடிவதை முடியும் என்றும் முடியாத்தை மறுத்துவிடுதலும் அப்போதைக்குச் சிரமாக இருந்தாலும் நாளடைவில் மன அமைதி கிட்டும். இல்லாவிடின் மன அமைதி கெட்டுவிடும். முறை தவறி, தாட்சண்யம் கருதிச் செய்வதால் பலர் துன்பத்திற்கு ஆளாகி மன அமைதியை இழந்து விடுகின்றனர்.
நல்ல நண்பர்கள் சேர்க்கை
நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும் பேறாகும். நல்ல நண்பர்கள் இருக்கும்போது தீய சிந்தனைக்கோ, தீய பேச்சுக்களுக்கோ இடமில்லை. தீமையில்லாதபோது அமைதி நிலைபெறுகிறது. நல்ல நூல்களும் மன அமைதிக்கு வழி வகுக்கிறது.
மன்னிக்கும் மனப்பான்மை
பிறர் செய்யும் சில குறைகளை - பொறுத்துக் கொள்ளவும் - சில குறைகளை மன்னிக்கவும் - சிலவற்றை முழுமையாக மறந்து விடவும் கற்றுக் கொள்வதால் பலரது அமைதி பாதுகாக்கப்படுகிறது.
தியானம்
தியானப் பயிற்சியால் மனம் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி காக்கப்படுகிறது; தியானப் பயிற்சி - முறையாக - நீண்ட நாள் - தொடர்ந்து செய்தால் அன்றிப் பயன் நல்காது. ஈடுபாடு இல்லாத தியானத்தாலும் பயனில்லை.
இறையருள்
சில வகையான துன்பங்கள் - விரைவில் தீர்க்கமுடியாத - ஊனங்கள் அவமானங்கள் - மன அமைதியைக் கெடுத்து விடுவதுண்டு. அத்தகைய சூழலில் இறையருளை எண்ணி நமது கடமையைச் செவ்வனே ஆற்றுவதே மன அமைதிக்குச் சிறந்த வழியாகும். அறிவுக்கும் அப்பாற்பட்டு - காரணம் காணவே முடியாத சில துன்பங்களுக்கு இறையருள்தான் வழிகாட்ட வேண்டும். அந்த நம்பிகையோடு செயல்படுவதுதான் மன அமைதிக்கு சிறந்த வழியாகும்.
ஈடு செய்தல்
நாம் அறிந்தோ அறியாமலோ சில தவறுகளைச் செய்து இருப்போம். அதற்குப் பிராயச்சித்தமாக - அதற்கு ஈடுசெய்யும் வகையில் - இசல நன்மைகளைச் செய்யும்போது நமக்கு மன அமைதி ஏற்படுகின்றது.
இது ஒரு வகை. மற்றொரு வகை நாம் செய்யாத ஒரு தவறுக்காக தண்டனை ஏற்க வேண்டிவரும். அப்போது, நமக்கு இப்போது ஏற்பட்டுள்ள துன்பம் ஏற்கனவே செய்த தவறுக்கு உரியது என்று சமநிலைப்படுத்திக்கொண்டால் அமைதியை இழக்க நேரிடாது.
மன அமைதியும் மன உறுதியும்
மன அமைதியும் மன உறுதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனதை அமைதியாக வைத்திருப்பவர்கள் எந்தக் காரியத்திலும் மன உறுதியுடன் இருப்பார்கள். அதேபோல் மன உறுதியுடன் இருப்பர்கள் ஒருபோதும் மன அமைதியை இழக்கமாட்டார்கள்.
மாறாக ஒன்றை இழந்தால் மற்றொன்றையும் இழந்துவிட நேரிடும், ஆகவே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக விளங்கும் இரண்டையும் ஒரு சேரப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
இந்த இரண்டு தன்மைகளையும் பாதுகாக்கவும் வளர்த்துக்கொள்ளவும் எவ்வித முதலீடு தேவை இல்லை. பொருட் செலவும் செய்ய வேண்டுவதில்லை. உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விடுத்து அறிவு பூர்வமாகச் சிந்தித்து நம்மை நாமே சரிசெய்துகொள்வதுதான் நாம் செய்ய வேண்டிய செயலாகும்.
சிலரைப் பாருங்கள். எப்போதும் சிரித்த முகத்துடனேயே செயலாற்றுவார்கள். அவர்களுக்கு நம்மைக் காட்டிலும் அதிகமாப் பொருளாதாரப் பிரச்னைகள், தீர்க்கமுடியாத குடும்ப பிரச்சினைகள். பல்வேறு வெளி விவகாரங்கள் என்று பல இருக்கும்.
அவற்றை அவர்கள் அணுகும் முறை - அவற்றைக் கையாளும்முறை - அவற்றைச் சீரணிக்கும் முறை - அவற்றை ஏற்றுக்கொள்ளும் முறை இவற்றை உற்றுக் கவனித்தால் - உண்மை விளங்கும். நாம் எந்த அளவுக்கு - இந்த அணுகு முறைகளில் குறைபாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பது விளங்கும்.
(இல.செ.க.)


ரொம்ப தேங்க்ஸ் awww.thannambikkai.net

முடியும்

ஏன் நாம் இயற்கையை உணர்ந்து கொள்ளவும், வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறோம்? ஏன் அமைதியான, சீரான வாழ்வைப் பெற முடியாமல் அல்லலுறுகிறோம்? ஏன் இந்த நிலை என ஆய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன், நீங்கள் ஒரு பையை எடுத்துக் கொண்டு நல்ல காய்கறி வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்கு புறப்பட்டுப் போகிறீர்கள். போகும் வழியில் விதவிதமாக பூக்களும், பழங்களும் உங்கள் கண்ணில் படுகின்றன, அவற்றை வாங்கிப் பையை நிரப்பிக் கொள்கிறீர்கள். பின்னர் கடைத்தெருவுக்குப் போய்க் காய்கறி வாங்கிய பிறகு பார்த்தால், அவற்றை வைக்கப் பையில் இடமில்லை. பையில்தான் ஏற்கனவே நிரப்பி விட்டீர்களே! இப்போது உங்கள் பிரச்சினை என்ன? ஏற்கனவே பையில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட்டு, எதை வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு வந்தீர்களோ, அந்தக் காய்கறியை வாங்கிப் போட்டுக் கொள்வதா? அல்லது, காய்கறியே வாங்காமல் ஏற்கனவே வழியில் வரும்போது பையில் நிரப்பிக் கொண்டு வந்தவற்றுடன் வீடு திரும்புவதா? கடைத் தெருவுக்குப் புறப்படும் பொழுதே காய்கறி தான் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டும் என்ற உறுதி வேண்டும். ஒவ்வொரு வகையிலும் அத்தகைய மன உறுதியைப் பெற்று இறைநிலை உணர்ந்து, உண்மை நெறியில் அறிவறிந்து வாழ்வது தான் தவம் (Yoga).
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

திங்கள், 29 டிசம்பர், 2008

lklk

புதன், 24 டிசம்பர், 2008


HAI CHELLAMS

Take it essy to all ways.

THATS ALL OUR THOUGHT TO ALL