சாமியார் ஒருவர் குரங்கு ஒன்றை பணியாளாக வைத்திருந்தார். சாமியைப் பார்க்க வந்திருந்தவருக்குப் பணிவிடைகள் செய்ய குரங்கை ஏவிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வேலை சொல்லும் முன்னாலும் குரங்கில் தலையில் கையில் இருந்த குச்சியால் ஒரு அடி அடித்து அனுப்பிக் கொண்டிருந்தார். வந்தவரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்். என்ன இது, அது பாவம், வாயில்லா உயிர், அமைதியாக இவர் சொல்வதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறது. இவர் சும்மா அடித்துக் கொண்டே இருக்கிறாரே என்று பரிதாபப்பட்டு “சாமி கொஞ்ச நேரம் அந்தக் குச்சிக்கு ஓய்வு கொடுங்களேன்” என்று கொஞ்சம் கடிதலாகவே சொன்னார்.
சற்று நேரத்தில் குரங்கு வந்தவரின் அருகில் வந்து அமர ஆரம்பித்தது. யாரும் எதுவும் சொல்லவில்லை. அவரது சட்டையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது. இவ்வளவு நல்ல குரங்கு, விளையாடி விட்டுப் போகட்டும் என்று அவரும் கண்டு கொள்ளவில்லை. இப்படியே போய், கடைசியில் அவர் தலையில் ஏறி முடியைப் பிடித்து ஆட்ட ஆரம்பித்த பிறகுதான் “சாமி, உங்க குச்சிக்கு வேலை கொடுங்க” என்று கேட்க மனம் வந்தது அவருக்கு.
நம் மனம் என்னும் எண்ணங்களும் அப்படித்தான். குதித்து கும்மாளம் போட்டு நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் சிக்கலில் மாட்டி வைப்பதில் கில்லாடி. அதற்காக குச்சியைக் கையில் எடுத்தால் சாதுவாக மாறி விடுகிறது. சாதுவாகி விட்டதே என்று குச்சியைக் கீழே போட்டு விட்டால் திரும்பப் பழைய புத்தி திரும்பி விடுகிறது.
எங்க பாஸ் என்னக்கு சொன்ன கதை :
புதன், 31 டிசம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக